பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாள்…! திமுக அரசு சமூக நீதி அரசு – திருமாவளவன்

Default Image

பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும், சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிர்ப்பிற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘திமுக அரசு சமூகநீதி அரசு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் சட்டப்பேரவையில் செய்துள்ள அறிவிப்பு அமைந்துள்ளது. சமூகநீதியின் பாதுகாவலர் பெரியாரின் பிறந்தநாளான செப்-17ஐ சமூகநீதி நாள் என அறிவித்திருப்பதை பாராட்டுகிறோம்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth