பெரியார் பல்கலை. துணைவேந்தர் விசாரணைக்கு தடை..!
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி கைது செய்தது. போலீசாரின் விசாரணையை அடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு… ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு..!
தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள். இதற்கிடையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெகநாதன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஓய்வுபெற்ற பின் லாபமடையும் நோக்கில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. லாப நோக்கில்லாமல் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்தை துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்தபோது, ” இந்த வழக்கில் விசாரணைக்கு ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை, எனவே வழக்கை ரத்து செய்ய கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாகவும், துணைவேந்தர் விசாரணைக்கு தடை விதிப்பதாகவும், தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு” நீதிபதிகள் அறிவுறுத்தினர்.