“பெரியார் மண் அல்ல பெரியாரே ஒரு மண்ணுதான்”…சீமான் ஆவேச பேச்சு!

பெரியாரை போற்றும் நீங்கள், ஏன் ஜெயலலிதா தலைமையை ஏற்றீர்கள்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

seeman

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசிய விஷயங்கள் இன்னும் சர்ச்சையில் உள்ளது. தொடர்ச்சியாக சீமான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூட சமீபத்தில் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

அரசியல் தலைவர்கள் பலரும் தன்னுடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தாலும் சீமான் மற்றொரு பக்கம் தொடர்ச்சியாகவே பெரியார் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “அதிமுகவும், திமுகவும் எல்லாவற்றிலும் கூட்டணி தான்” என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” நான் யாரிடமும் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்கவில்லை. நாடுகள் எதிர்த்து நிற்கும்போது யாருடைய தயவும் இல்லாமல் போட்டியிட்டவன் தான் இந்த பிரபாகரன் மகன். எத்தனை கூட்டணி கட்சிகள் வந்தாலும் என்னை வெல்ல முடியாது. பெரியாரை நீங்கள் தான் தூக்கி கொண்டு வாறீர்கள்..பெரியார் தான் பெண்களை படிக்க வைத்தார்.

பெரியார் தான் சோறு ஊட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள். அப்போ முன்னோர்கள் எல்லாம் சும்மாக இருந்தார்களா? பெண்களை கட்டி வைத்து அவர்கள் சாட்டயாலையே அடித்தார்களா? பெரியார் தான் சீர்திருத்தம் பெரியார் தான் எல்லாமே என்று பேசிவிட்டு இருக்கக்கூடாது. பெரியார் மண் என்று பேசாதீர்கள், இது சேர, சோழ, பாண்டியன் மண்..இது என் மண், தமிழ் மண், எங்களுக்கு பெரியார் இது மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான்” என ஆவேசமாக தெரிவித்தார்.

துணை முதலமைச்சசர் உதயநிதி பேசுகிறார் பெரியார்தான் முதன்முதலில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தினார் என்று. நான் இப்போது சொல்கிறேன். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான் எல்லாரையும் படிக்க வைத்த பெரியார், உங்களைப் படிக்க வைக்காமல் விட்டுவிட்டார்” எனவும் சீமான் பேசினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய சீமான் ” திருட்டு, உருட்டு என இரண்டிலும் அதிமுக,திமுக ஒரே கட்சி தான். பெரியாரை போற்றும் நீங்கள், ஏன் ஜெயலலிதா தலைமையை ஏற்றீர்கள்? நான் கேட்கும் இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? வாயை தான் திறந்திருக்கிறேன் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. இனிமேல் தான் ஒவ்வொரு விஷயமாக பேசுவேன்” எனவும் சீமான் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்