பெரியார் சிலை அவமதிப்பு ! உரிய நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் உறுதி

Default Image

பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து  முதலமைச்சர் பழனிசாமி  கூறுகையில், பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிலை அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாதுஎன்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்