பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திரு உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் தற்போது நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதி மொழி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் என உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது, சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு நெறியை எனது வாழ்வின் வழிமுறையாக கடைபிடிப்பேன். சுயமரியாதை, ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செய்லபாடுகள் அமையும் என்று கூறி இந்நாளில் உறுதி ஏற்கிறேன் என தெரிவித்தார்.
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…