பெரியார் படத்தை கையோடு தூக்கி சென்ற இபிஎஸ் தரப்பு.! ஓபிஎஸ்-க்கு உதவிய அமமுகவினர்.!
சென்னையில், பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, தாங்கள் கொண்டுவந்த பெரியார் புகைப்படத்தை இபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்றதால், அமமுகவினர் வைத்திருந்த பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ்.
இன்று தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் கொண்டாப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சியினர் தங்கள் மரியாதையை பெரியார் அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர். பலர் சமூக வலைத்தளம் மூலம் பெரியாரின் கருத்துக்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கிழே [பெரியார் புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.
அந்த சமயம் ஓ.பன்னீர்செல்வமும் அந்த இடத்திற்கு வந்ததால், இபிஎஸ் தரப்பு தாங்கள் கொண்டு வந்த பெரியார் புகைப்படத்தை மாலையோடு அப்படியே கையோடு எடுத்து சென்று விட்டனர்.
அப்போது, அங்கு பெரியார் சிலைக்கு அமமுகவினர் அதேபோல புகைப்படம் வைத்து மரியாதை செலுத்த வந்தனர், பெரியார் புகைப்படத்தை கையோடு கொண்டு வந்திருந்தனர். அதனை வைத்து அவர்கள் மரியாதை செலுத்திய உடன், அமமுகவினர் வைத்திருந்த புகைப்படத்திற்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.