தமிழக அரசு ஹெச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்!

Published by
Venu

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் லெனின் இந்தியாவுடன் தொடர்பற்றவர் என்பதை விட அறியாமை வேறு என்ன இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சுப.வீரபாண்டியன் சென்னை விமான நிலையத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை உடைப்போம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தது குறித்து பேட்டியளித்தார்.

“லெனின் மாபெரும் சிந்தனையாளர். உலகத்தலைவர்களுள் ஒருவர். லெனின் இந்தியாவுடன் தொடர்பற்றவர் என்பதை விட அறியாமை வேறு என்ன இருக்க முடியும்? தொலைபேசியை கண்டுபிடித்தவருடன் இந்தியாவுக்கு என்ன தொடர்பு? தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் இந்தியாவிற்கும் என்ன நேரடி தொடர்பு?” என்று கேள்வி எழுப்பினார்.

“இவர்கள் போக்கை இனி அனுமதிக்க முடியாது. வன்முறை போக்கை தூண்டிக் கொண்டிருந்தால் தமிழக அரசு கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்.
பாஜக நியாயமான கட்சியாக இருந்தால் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி ஒருவரை பேசவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது அதை மறைமுகமாக அவர்களுக்கும் உடன்படுவது என்றுதான் போன்றதாகும்.” என்று அவர் குற்றம்சாட்டினார்.

“ஹெச்.ராஜாவை பேச வைத்துவிட்டு வேடிக்கைப் பார்ப்பது. அவரது சொந்தக் கருத்து என்று சொல்வதைத் தவிர அவமானமான செய்தி வேறு எதுவும் இல்லை. பாஜக நடவடிக்கை எடுக்கிறதா என்பதைப் பற்றி கவலை இல்லை. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று சுப.வீ வலியுறுத்தினார்.

“யாரோ ஒருவர் பேசுகிறார் என்று விட்டுவிட்டு போக முடியாது. பெரியாரின் உயர்ந்த கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறவர்கள் இதை எதிர்க்க வேண்டும். நாளை காலை 11 மணிக்கு சென்னை சிம்சன் பெரியார் சிலைக்கு அருகில் நின்று எதிர்ப்பை பதிவுசெய்ய வேண்டும் என்று திராவிட இயக்கத்தினர், சமூகநீதி கோட்பாட்டாளர்கள், கட்சித் தலைவர்கள் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

“இப்போது இருக்கும் அரசு பெரியாரை போற்றி வந்திருக்கும் அரசுதான். போராட்டத்திற்கு அனுமதி தரவேண்டும். இதை விளையாட்டாக விட்டுச் செல்லமுடியாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் வன்முறையை வளர அனுமதிக்க மாட்டோம். சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு துணை போகமாட்டோம். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம்.” என சுப.வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

37 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

50 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago