பெரியகுளம் நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
பெரியகுளம் தாலுகாவில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 3 கிராமங்களில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. உதவி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.