கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டுகள் கழித்து பூட்டப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தர ஒன்றினை பிறப்பித்துள்ளது.அதன்படி வரலாற்று நினைவு சின்னமாக விளங்கி வருகின்ற தஞ்சை பெரியகோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வந்ததை அடுத்து தஞ்சை பெரியகோவில் நேற்று காலை 11 மணி முதல் மூடப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை நடைதிறந்த போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களோடு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். சரியாக 11 மணிக்குப் பிறகு பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. அதன்படி வருகிற மார்ச்.,31ந்தேதி வரை தஞ்சை பெரிய கோவில் மூடப்படுவதாகவும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்கின்ற அறிவிப்பு பதாகையும் மராட்டா நுழைவுவாயிலில் உள்ள பூட்டப்பட்ட கேட்டில் வைக்கப்பட்டுள்ளது.கோவில் பூட்டப்பட்டாலும் சுவாமிக்கு வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…