#Justnow:தொழில் முனைவோருக்கு அரசு மானியம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது.அதன்படி,இது குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.இதனிடையே,பல்வேறு புதிய அறிவுப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,நறுமணப் பூக்களைப் பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலையை தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்:”நறுமணப் பூக்களை பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க முன்வரும் தனியார் தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி,தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்”,என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025