கொரோனா நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் 90 ரூபாய் கடந்து விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை, மக்களை வதைக்கும் பாஜக, அதிமுக அரசுகள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களை வைத்தது வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.
கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வு மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்றும் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்தாலும், இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் கடுமையான வரிவிதிப்பும், மாநில அரசு சார்பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணம். மக்கள் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. இதனால் உடனடியாக மத்திய – மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…