சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை; மக்களை வதைக்கும் பாஜக, அதிமுக அரசுகள் – முக ஸ்டாலின்

கொரோனா நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் 90 ரூபாய் கடந்து விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை, மக்களை வதைக்கும் பாஜக, அதிமுக அரசுகள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களை வைத்தது வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.
கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வு மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்றும் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்தாலும், இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் கடுமையான வரிவிதிப்பும், மாநில அரசு சார்பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணம். மக்கள் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. இதனால் உடனடியாக மத்திய – மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#Covid19 நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள்!
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு எரிபொருள் விலை ஏறுகிறது!
மக்கள் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு.
வரிகளைக் குறைத்து #PetrolDieselPriceHike-ஐ மத்திய – மாநில அரசுகள் தடுக்க வேண்டும்! pic.twitter.com/J2v3wZu8E0
— M.K.Stalin (@mkstalin) February 11, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025