30 நாள் பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு..!
இன்று புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 30 நாள் பரோலில் போலீசார் விடுவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர்.
இதற்கிடையில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், அற்புதம்மாள் கோரிக்கையை பரிசீலித்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், இன்று புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 30 நாள் பரோலில் போலீசார் விடுவித்தனர். புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுகிறார்.