மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் : எச்.ராஜா
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.’ என கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், எச்.ராஜா அவர்கள், கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்று கூறியுள்ளார். மேலும், ‘ கமல் தன்னை நாத்திகர் என்று கூறிக்கொண்டாலும், ஒரு தேவாலயத்தின் உதவியுடன் தான் கட்சி துவங்கியுள்ளார் என்றும், அவர் அண்ணன் இறந்த போது, கிறிஸ்தவ முறைப்படியே அடக்கம் செய்துள்ளனர்.’ என்றும் தெரிவித்துள்ளார்.