தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு !
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மநீம வரவேற்பு.
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மநீம ட்விட்டர் பக்கத்தில், ‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததைக் கண்டித்து மதுரையில், மேலூர் அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் பங்கேற்றனர்.
மேலும், அரசை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, கரும்பைச் சேர்த்து வழங்குமாறு மநீம அரசை வலியுறுத்தியது. இந்நிலையில்,மக்கள் நீதி மய்யம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.