தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெரும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல் மற்றும் அவற்றை கண்காணித்தல் மற்றும் மாசு தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை வாரியத்தின் சில முக்கியமான செயல்பாடுகளாகும்.
இந்த செயல்பாடுகளில் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளில் இணையவழி மூலமாக செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நேரடி கலந்துரையாடல் மிகவும் குறைந்துள்ளது. வாரியத்தின் அதிநவீன இணையவழி வசதிகள் விண்ணப்பம்/மனுவின் நிலையை அவ்வப்போது தெரிவித்தாலும், நேரடி கலந்துரையாடல் மூலம் மட்டுமே பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் புரிதல் மற்றும் அதிக நம்பிக்கையை உருவாக்க முடியும்.
எனவே, தொழிற்சாலைகள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் நேரடி கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கும், வாரியத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்துவதற்கும் வாரியம் ‘நேரடி கலந்தாய்வு அமர்வு” (OPEN HOUSE SESSION) நடத்த முன்வந்துள்ளது. தனிநபர், தொழிற்சாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள, மாசு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்திக்கலாம்.
நேரடி கலந்தாய்வு அமர்வு ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும் நடைபெறும். இந்த நிலையில், 5-ஆம் தேதி விடுமுறையாக இருப்பின், அடுத்த வேலை நாளில் அதாவது இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நபரும் முன் தகவல் / அனுமதியும் இல்லாமல் நேரடி கலந்தாய்வு அமர்வில் பங்கேற்கலாம். இருப்பினும், நேரடி கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் வருகைக்கு முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க இயலும். இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.gov.in இல் ‘OPEN HOUSEல் என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் வருகையின் போது “ஆதார் அட்டையை” தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…