மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசீர்வாத யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவையில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன். நாடு முழுவதும் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது. கொரோனா விதிகளை பின்பற்றியே நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.
கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டியது. மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைக்கக்கூடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது முதன்முறையல்ல, ஏற்கனவே பல கோயில்களில் இருக்கின்றனர். மேலும், சர்வதேச நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…