மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மக்கள் ஆசி யாத்திரை இன்று தொடக்கம்..!

பாஜகவின் 3 நாள் மக்கள் ஆசீர்வாத யாத்திரை இன்று முதல் தொடங்குகிறது.
பாஜகவின் 3 நாள் மக்கள் ஆசீர்வாத யாத்திரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தலைமையில் கோவை காமராஜர்புறத்தில் இன்று முதல் தொடங்குகிறது.
அதன்படி,இன்று கோவையிலும்,நாளை திருப்பூரிலும்,நாளை மறுநாள் நாமக்கல்,சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து பெறுகிறார்.மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கப்படும். இதன் காரணமாகவே,ஆசீர்வாத யாத்திரையை பாஜக நடத்துகிறது.
இந்த மக்கள் ஆசீர்வாத யாத்திரை நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.