திமுகவினர் அடாவடி தனத்தால் வரும் காலத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் மக்கள் தடுப்பார்கள் என டிடிவி தினகரன் விமர்சனம்.
வருங்காலத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கையால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பொய்யான வாக்குறுதி அளித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். திமுக அமைச்சர்களின் ஆணவ பேச்சு தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தமிழை வைத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.
ஒரு விபத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். திமுகவினர் அடாவடி தனத்தால் வரும் காலத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் மக்கள் தடுப்பார்கள் என தெரிவித்தார். இதற்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதலமைச்சர் திரு.ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?! என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ‘நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் என கூறியிருந்தார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…