உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியவரை கைது செய்யாமல், இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? என அண்ணாமலை ட்வீட்.
திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். கைதை தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் அவர்கள், தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக எம்.பி ஆ.ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை அவரை கண்டித்ததற்காகக் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்துள்ளது கண்டிக்கத்தகது.
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியவரை கைது செய்யாமல், இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? அடக்குமுறைகளுக்கு என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.’ என தெரிவித்துள்ளார்.
@arivalayam அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள். (4/4)
— K.Annamalai (@annamalai_k) September 21, 2022