மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களும் வருகை தந்திருந்தார்கள்.
அப்போது, இன்ப நிதி அமர்ந்துவிட்டு பின்புறம் திரும்பி பார்த்தபோது அவருடன் வந்த நண்பர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். உடனடியாக இன்ப நிதி எழுந்து இங்கே வந்து அமருங்கள் என்பது போல கூறினார். உடனடியாக, இன்ப நிதியின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியதாக தற்போது அண்ணாமலை குற்றம்சாட்டி கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.
முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்” எனவும் காட்டத்துடன் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா… pic.twitter.com/bQWecdmRiD
— K.Annamalai (@annamalai_k) January 16, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!
February 24, 2025
தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறப்பு… விலை எவ்வளவு தெரியுமா?
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…
February 24, 2025
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025