ஸ்டாலின் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு தரப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், இட ஒதுக்கீடு வழங்க அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
2015ல் உச்ச நீதிமன்றத்தில், சலோனிகுமார் என்பவரால், தொடரப்பட்ட வழக்கில், தங்களை இணைத்துக் கொள்ளாமல், ஒதுங்கி வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய கலந்தாய்வு கூட்டம், கடந்த ஏப்ரல் மாதமே முடிந்துவிட்ட நிலையில், திடீரென்று தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.
உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இது குறித்து நடைபெறும் வழக்குகளில், மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்து, பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணிகள் , செய்த துரோகம் வெளிவந்துவிடும் என்ற எண்ணத்தில், இப்போது பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.எனவே, திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலின் அவர்களும் மக்களிடம் தவறான பொய்ப் பிரச்சாரம் செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும்…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…