“திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது!” – அமைச்சர் சி.வி.சண்முகம்
திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், ஒட்டம்பட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்பொழுது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என கூறினார். மேலும், தமிழகத்தில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிமுக அரசு உருவாக்கிவருவதாக தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.