இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு ஒரு படிப்பினையாகும்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். தோல்வியை தழுவிய ட்ரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து, வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு : வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு ஒரு படிப்பினையாகும்.’ என பதிவிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸ்க்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…