பாஜக தமிழகத்தில் நிராகரிக்கப்படும் கட்சி.! காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்.!
பாஜகவின் மதவாத கொள்கையை மக்கள் தொடர்ந்து நிராகரிக்கதான் செய்வார்கள். – காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம்.
பாஜக தலைவர்கள் அண்மை காலமாக அடிக்கடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தருகிறார்கள். அப்படி அவர்கள் வருகை தந்தாலும், அவர்களின் மதவாத கொள்கையை மக்கள் தொடர்ந்து நிராகரிக்கதான் செய்வார்கள். தமிழ்நாட்டில் பாஜக நிராகரிக்கப்படும் கட்சியாகவே எப்போதும் இருக்கும். என கார்த்திக் சிதம்பரம் கூறினார்.