பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுகொள்வார்கள்-அமைச்சர் செல்லூர் ராஜூ
பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் , பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபடும் என்று வெளியிட்டது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உற்பத்தி செலவு அதிகரிப்பு குறித்து மக்களுக்கு தெரியும். அதனால் பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.