அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரில் வழிபாடு செய்த மக்கள்.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்காக அவரது சொந்த ஊரில் மக்கள் வழிபாடு செய்துள்ளனர்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ்(55) இன்று நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் . மேலும் இவரே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் மற்றும் முதல் கருப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அமெரிக்கா தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் கமலா ஹாரிஸ் அவர்களின் குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்துள்ளனர் .
அதனையடுத்து, கோவில் பிரசாதமாக கமலா ஹாரிஸ் அவர்களுக்கு பிடித்தமான இட்லி மற்றும் வடை வழங்கப்பட்டது. அத்துடன் கமலா ஹாரிஸின் கிராம மக்கள் அவர் தேர்தலில் வெற்றி பெற கட்அவுட்களை வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025