நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் – இந்திய கூட்டணி எம்.பி-க்கள் இன்று ஆலோசனை..!

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர். அப்போது அப்பெண் நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை. மத்திய அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். எங்கள் மீது கவனத்தை திருப்பி எங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றே இவ்வாறு செய்தோம் என தெரிவித்து இருந்தார்.
நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்க.. உள்துறைக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்.!
இதனையடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்தில் பார்வையாளர் யாருக்கும் அனுமதி கிடையாது என அறிவித்ததோடு, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மக்களவையில் நடந்த அத்துமீறலை அடுத்து குடியரசுத் தலைவரை சந்திக்க இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆலோசனையை அடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025