பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.
பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த யூ-டியூபர் மதன் நேற்று தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போதுதனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர். இதனைத் தொடர்ந்து, தருமபுரியில் இருந்து நேற்று இரவு மதனை தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில், பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் dcpccbi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.
மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…