மக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அவரது பதிவில், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன் மக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்.
ஒரு குழுவே, அமைப்போ, அரசோ மட்டும் மழைநீர் சேகரிப்பை முழுமையாக செய்து முடிக்க முடியாது. அனைவரும் இணைந்து மழைநீரை சேமிப்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.