மக்களே மாஸ்க் போடுங்க;இன்று முதல் ரூ.500 அபராதம் – சென்னை மாநகராட்சி உத்தரவு!
சென்னை:இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக வளாகங்கள்,தியேட்டர்கள்,துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939ன் படி ரூ.500/- அபராதம் விதிக்கப்படும்.#ChennaiCorporation #CovidIsNotOver #MaskUp pic.twitter.com/T7prykBEiY
— Greater Chennai Corporation (@chennaicorp) July 5, 2022