கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல்! எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் 10 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 5.30 மணி அளவில் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது.
இன்று ரெட் அலர்ட் மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இந்த சூழலில், வரும் 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதற்கான விவரத்தையும் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.