File picture of Tamil Nadu Governor R.N. Ravi | Photo Credit: B. Velankanni Raj
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
நாளை 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு!
இந்த நிலையில், ஆர்.என்.ரவி அவர்கள், மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலைமையை மத்திய அரசும் மாநில அரசும் உயர்மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…