ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது – அன்புமணி ராமதாஸ் வேதனை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் நிகழ்வது வேதனையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். 

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு பாமக வலியுறுத்தி வந்ததன் பயனாக கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது செல்லாது என அறிவிக்கப்பட்டது பெரும் பின்னடைவு. ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே ஆன்லைன் சூதாட்டத்திற்கு மக்களை அழைக்கும் விளம்பரங்கள் குவிகின்றன.

தடை விலகிய 16 நாட்களில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதிலிருந்து நிலைமையின் தீவிரத்தை உணரலாம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்ட முன்வரைவை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்

இளைஞர் பச்சையப்பனின் தற்கொலை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் எவரும் ஆன்லைன் சூதாட்டம் என்ற மாயவலையில் சிக்கி விடாமல் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதனிடையே ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய சட்டத்தை தமிழக அரசு 6 மாதத்திற்குள் கொண்டுவரும் என்று நம்பிக்கை உளது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

9 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

11 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

11 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

13 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

14 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

15 hours ago