அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
நிவர் புயல் கடந்து விட்டது என அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம். புயல் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது.
இதனையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிவர் புயல் கடந்து விட்டது என அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், புயல் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.