புயல் தொடர்பான அரசின் எச்சரிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ..!அமைச்சர் ஜெயக்குமார்
புயல் தொடர்பான அரசின் எச்சரிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒகி புயல் அனுபவத்தை கொண்டு, கஜா புயலுக்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டது முன்னெச்செரிக்கை போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஒரு மீனவர் கூட புயலில் சிக்கவில்லை, வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.கஜா புயலில் விரைந்து செயல்பட்டதற்காக தமிழக அரசை பாராட்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.மேலும் புயல் தொடர்பான அரசின் எச்சரிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போதுதான் உயிரிழப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.