டெங்கு அதிகரிக்கும் காரணத்தினால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் – சுகாதார துறை செயலாளர்..!

Default Image

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் டெங்கு அதிகரிக்கும் காரணத்தினால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 24,760 இடங்களில் 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவதற்கான அறிகுறி காணப்படுகிறது.

கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கொரோனா மரணங்கள், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் என தெரிவித்தார். 33.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் டெங்கு அதிகரிக்கும் காரணத்தினால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இதுவரை 2919 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat