மக்களே ரெடியா…இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

Published by
Edison

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.அந்த வகையில்,மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தின.இதனால்,கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வந்தது.ஆனால்,கடந்த சில நாட்களாக தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று (மே 8 ஆம் தேதி) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.குறிப்பாக,2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,இது தொடர்பாக,அவர் கூறுகையில் :”தமிழகத்தில் 2 கோடி பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.ஏனெனில்,அடுத்த மாதம் கொரோனா நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.இதனால்,கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.எனவே,இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,திருவாரூர் மாவட்டத்தில் இன்று (08.05.2022) ஞாயிற்றுகிழமையன்று 2,080 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும்,இம்முகாமில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களும்,இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும்,பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாத அனைத்து முன்களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்டுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Recent Posts

“TVK vs DMK., மன்னராட்சி ஸ்டாலின்., சீக்ரெட் ஓனர் மோடி.,” பொதுக்குழுவில் விஜய் ஆவேசப் பேச்சு!

சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…

15 minutes ago

“விசிக-வை குளோஸ் பண்ண போறாங்க.,” திருமாவுக்கு அட்வைஸ் கூறிய ஆதவ்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…

35 minutes ago

பாஜகவை விட மோசம்…அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது..ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித்…

2 hours ago

தவெகவில் விஜய்க்கே முழு அதிகாரம்., மும்மொழி கொள்கை, வக்பு சட்டத்திருத்தம்.., 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில்…

2 hours ago

திட்டமிட்டு பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்…

3 hours ago

“கை நீட்டி பேசாதீங்க., அது மரபல்ல..” அதிமுகவினரை கடிந்து கொண்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…

3 hours ago