ஓசூரில் மக்கள் போராட்டம் – அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்..!

Default Image

நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த விடியா அரசுக்கு எனது கடும் கண்டனங்கள் என ஈபிஎஸ் ட்வீட். 

கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் பகுதியில் எருது  விடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாத காரணத்தினால் இந்த விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதனை அடுத்து எருது விடும் விழாவிற்காக காளையுடன் வந்தவர்கள் ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து,  எந்த விதிமுறை இன்றி எருது விடும் விழாவிற்கு இரண்டு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்தனர்.

ஆனால், அவர்களோ கூடுதல் நேரம் வேண்டும் என்று மூன்று மணி நேரமாக சாலை மறியல் ஈடுபட்ட நிலையில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அரசு வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு இருந்தவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

EPS condemns - Pongal gift

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிருஷ்ணகிரி,சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து,ஹோசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த விடியா அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி. மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த நிர்வாக திறமையற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்