தூத்துக்குடி மக்கள் சாதி மதத்தை அடிப்படையாக கொண்டு வாக்களிக்கமாட்டார்கள்-கனிமொழி
நேற்று மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது.இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.அதேபோல் தமிழகத்தில் பொறுத்தவரை திமுக கூட்டணி அதிகப்படியான வெற்றியை ருசித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழக மக்கள் மற்றும் தூத்துக்குடி மக்கள் சாதி மதத்தை அடிப்படையாக கொண்டு வாக்களிக்கமாட்டார்கள்.தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.