இவர்களின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

Default Image

மாண்புமிகு அமைச்சர் அண்ணன் பிடிஆர்  அவர்களின் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் அவர்கள் வருகை புரிந்தார்.

அப்போது அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின் பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து  அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு அமைச்சர் அண்ணன் பிடிஆர்  அவர்களின் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர். அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறைகளை தூண்டும் இவர்களின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்