தமிழக மக்கள் சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்க கூடியவர்கள். மத நல்லிணக்கத்துடன் செயல்படுபவர்கள். -மு.க.ஸ்டாலின் பேச்சு.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசு சார்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டம் நிறைவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தெரிவித்த கருத்துக்களை கவனத்துடன் கேட்டுக்கொண்டேன். ஆரம்பத்தில் நீங்கள் உறுதியளித்தவாறு, அனைத்து நிலை காவலர்களுக்கும் புதிய உற்சாகத்துடன் பணியாற்ற வழிவகுக்க வேண்டும். தமிழக மக்கள் சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்க கூடியவர்கள். மத நல்லிணக்கத்துடன் செயல்படுபவர்கள். அதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என குறிப்பிட்டார்.
மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்.
ஒரு குற்ற சம்பவம் நேர்ந்தால், துரித விசாரணை செய்து, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுதான் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க உதவும். காவலர்கள் களப்பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சம்பவம் நடந்த இடத்திற்கு உடனே செல்ல வேண்டும். காவல் நிலையம், துணை காவல் நிலையம், செக் போஸ்ட் ஆகிய இடங்களுக்கு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். என தெரிவித்தார்.
அடுத்ததாக, கிராம மக்களுடன் கலந்துரையாடி அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும். ஆய்வு கூட்டத்தில் கூறப்படும் அறிவுரைகள் பின்பற்ற படவில்லை என்றால் அதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒழுங்காக பணியாற்றும் காவலர்களை பாராட்ட வேண்டும். காவல் நிலையம் சென்றால் நியாயம் கிடைக்கும் என அனைவரும் நம்ப வேண்டும். என தனது உரையில் குறிப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…