சென்னை மக்களே..! இப்படிப்பட்ட வீடியோக்களை நம்பாதீர்கள் – சென்னை மாநகராட்சி
சென்னை மக்களே, சமூக வலைதளங்களில் மழை, வெள்ளம் குறித்து பகிரப்படும் போலியான வீடியோக்கள் மற்றும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல்.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில், தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில், மழை தொடர்பான பல வதந்தியான பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பரவி வருகிறது. இதனையடுத்து, சென்னை மாநகராட்சி இதுகுறித்து, ‘சென்னை மக்களே, சமூக வலைதளங்களில் மழை, வெள்ளம் குறித்து பகிரப்படும் போலியான வீடியோக்கள் மற்றும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும், அரசு இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை மட்டுமே நம்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Dear #Chennaiites
Do not trust the fake videos being circulated and shared!
Please trust only Government website and social media channels for flood related news.#GCC requests the public to not panic trusting the fake videos.#Chennai1913#ChennaiCorporation#ChennaiRains https://t.co/XDL8PJp4DT pic.twitter.com/qewQeKxh63— Greater Chennai Corporation (@chennaicorp) November 11, 2021