சென்னை மக்களே! அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, உள்ளிட்ட இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டது. இதனால் நகரின் சில இடங்களில் நீர் தேங்கி மக்கள் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல மழை குறைந்துள்ளது. முன்னதாக, காணாமலைக்கான ரெட் அலர்ட் சென்னைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன்பிறகு கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். “இன்றிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கமான பருவமழையே பெய்யும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது.என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்து இருந்தார்.
அவர் சொன்ன பிறகு தான், சென்னை மக்களுக்கு பெருமூச்சே விட்டனர். இந்நிலையில், சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, அல்லற்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆகிய இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.