“அன்பார்ந்த சென்னை மக்களே…இன்று இந்த இடங்களில்தான் தடுப்பூசி முகாம்” – மாநகராட்சியின் முக்கிய தகவல்!

Default Image

சென்னை:இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி அதற்கான இடங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.அதன்படி,சுகாதார பணியாளர்கள்,முன்களப் பணியாளர்கள்,இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி அதற்கான இடங்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக,சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

அன்பார்ந்த சென்னை மக்களே!இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது”,என்று தெரிவித்துள்ளது.

மேலும்,சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களையும் மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி,சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_booster_camp/  என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி,

  • கத்திவாக்கம்,
  • திருவொற்றியூர் குப்பம்,
  • சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர்,
  • சாத்தங்காடு உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்