சென்னை மக்களே உங்களுக்கு தான்! நாளை (20-08-2024) இங்கெல்லாம் மின்தடை ..!
சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-20 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம்.
தென் சென்னை :
எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டமான் கோயில், பரமேஸ்வரன்நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன்நகர், TNHB ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் மின்தடை ஏற்படும்.
வட சென்னை :
திருவெள்ளவயல், காட்டூர், கல்பாக்கம், வோயலூர், மேரட்டூர், நெய்த்வயல், கணியம்பாக்கம், வெள்ளம்பாக்கம், கடப்பாக்கம், செங்கழநீர்மேடு, ஊர்ணம்பேடு, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த இடங்களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.