ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Published by
லீனா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.  அப்போது பேசிய அவர், தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பதை கண்காணித்து விதிகளை மீறினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது.

விதிகளை மீறினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது

தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதே அரசியல் அமைப்பின்படி ஆளுநரின் கடமையாகும். சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதா, மாநிலத்தின் அதிகார வரம்பை மீறியதாக இருப்பதாக ஆளுநர் உணர்ந்தால், அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய சட்டப்பேரவைக்கு அவர் திரும்ப அனுப்பலாம்.

மறுபரிசீலனைக்குப் பிறகு சட்டப்பேரவை மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் என்றால், அந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்ததாக புரிந்துகொள்ள வேண்டும்.

மாநில சட்டமியற்றும் குழுவில் (state legislature)ஆளுநர் முதன்மையானவர். சட்டப்பேரவை, ஆளுநருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எனவே சட்டப்பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது சட்டமியற்றும் குழுவால் நிறைவேற்றப்பட்டது என்று பொருளாகாது.

ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தால்தான் சட்டமாகும். ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிலுவையில் வைப்பது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது ஆகிய மூன்றில் ஆளுநர் ஒன்றை தேர்வு செய்ய அரசியலமைப்பு அதிகாரம் கொடுக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை

நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் போராட்டம் செய்ய பயன்படுத்தப்படுகிறது என  தெரிவித்துள்ளார். ஆளுநரின்  பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

15 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

16 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

19 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

19 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

20 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 days ago