கிடு கிடுவென உயர்ந்த கேரம் போர்டு விலை.? அதிர்ச்சியில் மக்கள்.!
தூத்துக்குடியில் 700 ரூபாய்க்கு விற்பனையான கேரம்போர்டு தற்போது ரூபாய் 1, 400 ரூபாய்க்கும் ரூபாய் 1500 க்கு விற்பனை செய்யப்பட்ட கேரம் போர்ட் 2,500 கும் மேல் விற்பனையாகிறது.
இந்தியாவில் கோரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது, மேலும் இதனால் பெரும்பாலனா தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன , மேலும் பள்ளி கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன . இதனால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர் வெளியில் சென்று விளையாட முடியாத நிலையில் உள்ளது , கடந்த மாதம் முதல் அறிவிக்கப்பட்டஉரடங்கில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே வாகன போக்குவரத்து காணப்பட்டது .
இந்நிலையில் அதே நேரத்தில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் எதுவும் திறக்கப்படவில்லை இதனால் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக விளையாடுவதற்கு மைதானங்களுக்கு செல்ல முடியவில்லை அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் இளைஞர்கள் வீட்டிலே இருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்குள் அமைந்து விளையாடக்கூடிய கேரம் போர்ட் மட்டும் சீட்டு விளையாட்டு தாயம் மற்றும் செல்போன் டிவி ஆகவே பொழுதுபோக்கு அம்சமாக அவர்களுக்கு விளங்கி வருகிறது .
மேலும் இதனால் பெரும்பாலான வீடுகள் கேரம் போர்ட் மட்டும் சீட்டு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் அந்த நேரத்தில் உற்பத்தி இல்லாத விளையாட்டு உபகரணங்களில் வரத்து குறைந்துவிட்டது , இதைத் தொடர்ந்து அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆம் தூத்துக்குடியில் 700 ரூபாய்க்கு விற்பனையான கேரம்போர்டு தற்போது ரூபாய் 1, 400 ரூபாய்க்கும் ரூபாய் 1500 க்கு விற்பனை செய்யப்பட்ட கேரம் போர்ட் 2,500 கும் மேல் விற்பனையாகிறது. மேலும் கேரம் போர்ட் காய்ன்கள் தனியாக வாங்கும் நிலையும் உள்ளது , இதை போன்று 3 கட்டுகள் கொண்ட பிளாஸ்டிக் சீட் கட்டுகள் 120கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தற்போது விலை ரூபாய் 180 ஆக உயர்ந்துள்ளது .இந்த விளையாட்டுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடை கடையாக தேடி சென்று வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.