கடலூர் மாவட்ட மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது .அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (நவம்பர் 21 ஆம் தேதி ) மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கடலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இன்று முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.எனவே கடலூர் மாவட்ட மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…