மக்களே..! தடுப்பூசி போட்டால் வீட்டுமனை பட்டா பரிசு…!
தடுப்பூசி செலுத்த வரும் மக்களில் 10 பேருக்கு குழுக்கல் முறையில் தலா 2 சென்ட் நிலம் வழங்கப்படும் என பவனி வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த செப்.12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அந்த வகையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்று 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் அம்மாபேட்டை பகுதியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பல பரிசுகளை பவானி வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி தடுப்பூசி செலுத்த வரும் மக்களில் 10 பேருக்கு குழுக்கல் முறையில் தலா 2 சென்ட் நிலம் வழங்கப்படும் என பவனி வட்டாட்சியர் அறிவித்துள்ளார். இந்த வீட்டு மனை பட்ட வீடுகளற்ற ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 4 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இதனால் காலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.